#Hinduism is a Grand Ocean defines the late Scholar #Cho Ramaswamy.
To Know the precise sides of the coin extra. Hit the crimson subscribe button @ https://goo.gl/VV3bcN
You may attain us @ [email protected]
Creator’s Observe – Author Maridhas
சீமான் போன்ற போராளிகள் என்ற போர்வையில் இந்து மக்களிடம் குழப்பத்தை விதைப்பதில் வேகம் காட்டுகிறார்கள். இந்த மக்கள் ஒற்றுமையாக இருப்பதை உடைத்தால் பலருக்கு அது ஆதாயம் என்பதால் அதற்கு ஆதரவு மறைமுகமாக இங்கே கிடைக்கிறது.
இந்து என்ற பெயர் காரணம் – :சிந்து நதிக்கும் கிழக்கே உள்ள பல்லுருவ தெய்வ வழிபாடுகள் கொண்ட மக்கள் என்று பொருள் கொள்ள முடியுமே தவிர வேறு இல்லை. இது பெர்ஷியன் மூலம் அரபியர்கள் வழக்கப்படுத்தி வந்த வார்த்தை தவிர இது இப்போது இந்த மக்களின் வாழ்வியல் முறைக்கு அடையாள பெயராக நிற்கிறது. அவ்வளவு தான். எனவே இந்து என்பது ஒரு வாழ்வியல் முறை. மற்றபடி ஆப்ரகாம் வழித்தோன்றல்கள் மூலம் வந்த மாதங்கள் போல் அல்ல.
உலகத்தில் மிக மிக மத நல்லிணக்கம் கொண்ட மக்கள் இவர்கள் என்பது உலகமே அறியும். ஆனால் சமீபகாலமாக இவர்களை இவர்களிடம் இருக்கும் அந்த நல்ல பண்பை கொண்டே பிரிக்க துடிக்கும் வேலை நடப்பது அருவருப்பாக உள்ளது. இப்போது இவர்களை உடைத்து மதம் மாற்றி என்ன சாதிக்க போகிறார்கள் ஒரு கூட்டம்?
நான் ஒரு இந்து – எனக்கு மானசரோவர் தொட்டு ராமேஸ்வரம் வரை தான் ஆன்மீக எண்ணமும் விருப்பமும் இருக்குமா இல்லை – காசாவில் ஜெருசலம் சென்று தேட வேண்டுமா? என் முன்னோர்கள் மேற்கொண்ட ஆன்மீக தேடல்களில் நான் பிடித்து கொள்வது இயற்கையானது தானே. அதில் சமூக குறைகள் குற்றங்கள் இருந்தால் அதை இந்த மக்களே தீர்ப்பது தானே நலம். அதற்காக இந்த ஆன்மீகவியலே அழிய வேண்டும் என்று பெரியாரியம் , திக , திமுக போன்ற கூட்டங்கள் வேலை செய்வது என்ன நாகரீகம்?
ஒரு இஸ்லாமியர்க்கு என்ன உரிமை உள்ளதோ , ஒரு கிருஷ்டவருக்கு என்ன உரிமை உள்ளதோ அதே தானே இந்துக்கள் எதிர்பார்க்கிறார்கள்??? ஆனால் இங்கே பெரியாரியம் , திராவிடம் , கம்யூனிஸ்ட் எல்லோரும் தெய்வ நம்பிக்கை சார்ந்து விமர்சனம் செய்வது இந்துக்களை மட்டும் என்னும் போது அது என்ன நியாயம்? அது என்ன பகுத்தறிவு?
ஏன் உங்கள் யாருக்கும் மற்ற மதங்கள் என்றால் பகுத்தறிவு அனைத்துப் பக்கத்திலும் மூடிக்கொண்டு – சிறுபான்மையினர் உரிமை என்று பேச வாய் வருகிறது? இது என்னவிதமான பகுத்தறிவு???
சாஸ்திர சம்ரதாயங்கள் மூட நம்பிக்கைகளை எதிர்ப்பதை நான் வரவேற்கிறேன். ஆனால் இந்த மக்களின் ஆன்மீக தேடலை உடைக்கவோ – இந்த மக்களின் ஆன்மவியலை முற்றிலும் வீழ்த்தவோ எவர் வந்தாலும் எதிர்ப்பேன். அது எந்த உச்சம் என்றாலும் ஒரு இந்துவாக எதிர்வினை காட்டுவது தான் என் விருப்பம். தவிர இஸ்லாமிய கிருஷ்தவர்கள் மத உள்விவகாரங்களில் சென்று எந்நாளும் நான் பேச விரும்பியதும் இல்லை – விவாதம் செய்ததும் இல்லை. அதில் எனக்கு விருப்பமும் இல்லை.
உண்மை என்ன வென்றால் :
“இங்கே இருக்கும் இஸ்லாமியரும் , கிருஷ்தவர்களும் கூட இந்துகள் தான் – இது ஒரு வாழ்வு முறை. ஆனால் அதை ஆப்ரகாம் வழி தோன்றல் மாதங்கள் ஏற்பது இல்லை என்பது ஒரு சிக்கல்”.
வாய் முழுவதும் பொய் மட்டுமே பேசி பிழைப்பு நடத்தும் சீமான் போன்றவர்கள் முற்றிலும் வீழ்த்த இந்துக்கள் எதிர் குரல் கொடுக்கவேண்டியது அவசியம். அதை விடத் திராவிட கழகம் வீழ்வது.
-மாரிதாஸ்
source