Categories: Wisdom

High 10 Most Standard Hindu Festivals India | இந்தியாவில் கொண்டாடப்படும் 10 முக்கிய இந்து பண்டிகைகள்



இந்தியாவில் கொண்டாடப்படும் 10 முக்கிய இந்து பண்டிகைகள்

நமது நாட்டில் பண்டிகை என்பது பொதுவாக சமயத்துடன் தொடர்புடையது. மக்கள் தங்கள் நம்பிக்கைக்கேற்ப அதை சிறப்புற செய்து கொண்டாடும் வழக்கம் பண்டிகையானது. நமது நாட்டில் இந்து பண்டிகையானது மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அப்படி நமது நாட்டில் உள்ள மிக முக்கியமான 10 இந்து பண்டிகைகளை பற்றி தெரிந்து கொள்வோம்

ஓணம் பண்டிகை

கேரளா மக்களால் மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 10 நாள்கள் இந்த விழா கொண்டாடப்படும். மகாபலி சக்ரவர்த்தி வருடத்திற்கு ஒருமுறை மக்களை காண வருவதாக ஐதீகம்

ஸ்ரீ ராம நவமி

பகவான் ராம பிரானின் பிறந்த நாளை கொண்டாடும் ஒரு பண்டிகை.

மகா சிவ ராத்திரி

இந்துக்களால் சிவபெருமானுக்கு கொண்டாடப்படும் மிகப்பெரிய விரதம்

கிருஷ்ண ஜெயந்தி

பகவான் கிருஷ்ணரின் அவதாரம் நிகழ்ந்த தினத்தை வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்கள்

பொங்கல்/ மகர சங்கராந்தி

சூரியனை வழிபாடும் பண்டிகை. தமிழ் நாட்டில் பொங்கலாகவும் வட மாநிலங்களில் மகர சங்கராந்தியாகவும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் 10 நாட்கள் இது விமரிசையாக கொண்டாடப்படும்.

விநாயக சதுர்த்தி

விநாயக பெருமானின் அருளை பெற விரதமிருந்து கோவிலுக்கு சென்று வணங்குவர்

ரக்ஷா பந்தன்

சகோதர சகோதரிகளின் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது

நவராத்திரி

துர்கை , சரஸ்வதி,லட்சுமி என்னும் முப்பெரும் தேவியரை வழிபட்டு அவர்கள் அருளை பெற நவராத்திரி கொண்டாடப்படுகிறது

ஹோலி

வட இந்தியர்களால் கொண்டாடப்படும் ஒரு மிகப்பெரும் வண்ணமயமான பண்டிகை. ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை தூவி கொண்டாடுவர்

தீபாவளி

நரகாசுரனை வதம் செய்த நாளை தீபாவளியாக கொண்டாடுகிறோம். இது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது

source